அத்திமரப்பட்டியில் கோயில் சப்பரப் பவனியில் இளைஞர்களுக்கடையே மோதல் 4 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

அத்திமரப்பட்டியில் கோயில் சப்பரப் பவனியில் இளைஞர்களுக்கடையே மோதல் 4 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் கோயில் சப்பரப் பவனியில் இளைஞர்களுக்கடையே மோதல் 4 பேர் கைது.

தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் கோயில் சப்பர பவானியில் கோஷ்டி திடீரென மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் 4 பேர் கைது 10 பேரை போலீசார் தேடி வருகின்றன.

தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் வடபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆ31 ம்தேதி கோவில் கொடை நடந்து வந்தது. இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சப்பர பவனி நடந்தது. அப்பொழுது இளைஞர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பை சேர்ந்த பலர் காயம் அடைந்தனர். திடீர் மோதலால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

இதில் தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோதல் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களின் அதே பகுதியைச் சேர்ந்த காத்த முத்து மகன் சேதுபதி (29), பெரியசாமி மகன் பாலாஜி (29), சாந்தகுமார் மகன் ராபின் (25), நாராயணன் மகன் பத்திர பாண்டி(40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேரை போலீசார் வலைவீச்சு தேடி வருகின்றன. கோயில் சப்பரப் பவனியில் நடந்த மோதல் சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டம் 
அத்திமரப்பட்டி 
கணேஷ்.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad