திருப்பூர் மாநகராட்சி 52 வது வார்டில் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது பொதுமக்கள் புகார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

திருப்பூர் மாநகராட்சி 52 வது வார்டில் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது பொதுமக்கள் புகார்


திருப்பூர் உள்ளாட்சி ஊழியர் சங்கம் (CITU) மாவட்ட செயலாளர் சங்கர் குமார் அவர்கள் தெரிவித்துள்ள புகாரில் 

திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் 52 வது வார்டில் தென்னம்பாளையம் சந்தை எதிரில் உள்ள வெள்ளியங்காடு பகுதிக்கு செல்லும் பிரதான ரோடு இது என்றும் பரபரப்பாக வாகனங்கள் பயணிக்கும் முக்கிய ரோட்டை தரம் இல்லாத ரோடாக அமைத்துள்ளார்கள் மேலும் பழுதான ரோட்டை சரி செய்தாலும் மீண்டும் மீண்டும் குழிகள் ஏற்பட்டு இதே நிலைமை தான் நீடிக்கிறது இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிகளில் விழும் நிலைமை உள்ளது ஆட்டோ ஒன்று இந்த குழியில் சிக்கி கொண்டது திருப்பூர் மாநகராட்சியில் என்றுதான் தரமான ரோடு போடுவார்களோ என்று புலம்பி தீர்க்கும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகள் தரமான ரோடாக இந்த ரோட்டை ரோட்டை மாற்றி தர வேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad