73 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் ஒன்றியம் சார்பில் வாழ்த்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

73 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் ஒன்றியம் சார்பில் வாழ்த்து.

73 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் ஒன்றியம் சார்பில் வாழ்த்து...... நிர்வாகிகள் முன் பிரம்மாண்ட கேக் வெட்டினார்.

 அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 73 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தண்டுபத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. 

இதில் திருச்செந்தூர் ஒன்றிய திமுக சார்பில் கொண்டுவரப்பட்ட கேக்கை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெட்டி கொண்டாடினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொருளாளர் வி பி ராமநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய திமுக செயலாளர்கள் செங்குழி ஏ பி ரமேஷ், டிபி பாலசிங், இளங்கோ, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜனகர், திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் ஆர் சுடலை, துணைச் செயலாளர் தோப்பூர் பெருமகராஜன், 

உடன்குடி பேரூர் செயலாளர் மால் ராஜேஷ், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஜெயபிரகாஷ், ராஜபிரபு, உடன்குடி முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் அஸ்சாப் கல்லச்சி, குலசை கோவில் தக்கார் கண்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad