ஸ்ரீ விஸ்வகர்மா நலச்சங்கம் சார்பில் ஸ்ரீ விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா மற்றும் 7ம் ஆண்டு விழா உடன்குடியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் பேச்சிமுத்து தலைமை வைத்தார். பொருளாளர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்து லட்சுமண பெருமாள், துணை தலைவர்கள் பரமசிவம், கோவிந்தராஜன், செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மந்திரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
விழாவில் விஸ்வ பிரம்மா பூஜை தீபாராதனை நல திட்ட உதவிகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை, 10 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் சிறப்பு விருந்தினர்களாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரி, உமா மகேஸ்வரி கணேசன், டாக்டர்கள் அஜய் ராஜா, பால குமரன், விஏஓ சுரேஷ், தனலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விழாவில் துணை செயலாளர்கள் ஜோதி பாஸ், கண்ணன் கரிகிற ஐயப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆலோசகர்கள் குறிப்பிட பலர் கலந்து கொண்டனர் முடிவில் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக