குப்பை குளமாக மாறும் கொத்தங்குளம்
கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
நெல்லை செப்.22-
கோபாலசமுத்திரம் அருகே கொத்தங்குளம் பகுதியில் நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் இன்று மனு அளித்தனர்.
நெல்லை அருகே கோபாலசமுத்திரம் கொத்தங்குளம் இந்திரா நினைவு காலனி பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொத்தங்குளம் இந்திரா நினைவு காலனியில் நாங்கள் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் முன்னோர்கள் பல தலைமுறைகளாக ஊரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டான் குழியை நன்னீர் பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் கோபாலசமுத்திரம் பேரூராட்சி நிர்வாகம் சேகரிக்கும் மக்கள் மற்றும் மக்காத குப்பைகளை நேரடியாக தரம் பிரிக்காமல் தினந்தோறும் டன் கணக்கில் அங்கு கொட்டி வருகிறது.
இது குறித்து பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அங்கு கொட்டப்படும் குப்பைகள் மாதம் இருமுறை பேரூராட்சி ஊழியர்களால் எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசு படுவதோடு எங்களுக்கு சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டு வருகின்றன.
மேலும் அப்பகுதியில் மருத்துவ கழிவுகள், கசாப்பு கடை கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய்களும் பரவுகின்றன எனவே கொத்தங்குளம் பகுதியில் கொட்டப்படும் அனைத்து குப்பைகளையும் அகற்றிட வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் மாடசாமி திருநெல்வேலியில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக