குமரி:பெண்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் தினசரி குடிநீர் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புத்தன்அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி முறையாக செய்யப்படாததால்,தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கூறி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 5 வது வார்டு கட்டையன்விளை பகுதியில் பெண்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு-மேலும் அப்பெண்களுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சி மதிமுக கவுன்சிலர் உதயகுமார் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக