கடலூர், செப்டம்பர் 24 | புரட்டாசி 07:
நெய்வேலி அருகே தென் குத்து கிராமத்தில், என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்துக்காக புதிய நிலம் கையகப்படுத்தக் கூடாது என்பதோடு, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், செய்தியாளர்களிடம் பேசியபோது:
என்எல்சிக்கு ஆதரவாக நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் அல்லது தமிழக அரசு தலையிடக்கூடாது.
அரசு இவ்வகையில் தலையிட்டால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்களை ஒன்று திரட்டி, தமிழக அரசுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்.
புதிய நிலம் கையகப்படுத்தப்படக் கூடாது; ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஒரு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத் திட்டம் தொடர்பான இந்த போராட்டம், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Permalink: Panruti-MLA-Velmurugan-Warns-Govt-on-NLC-Land-Acquisition
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக