தமிழியக்கம் குறளோவியம் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சி நூலகம் அறிவுசார் மையத்தில் தமிழியக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான குறளோவியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகர் அசினா அனைவரையும் வரவேற்றார். தமிழியக்கம் செயலாளர் புலவர் இர.நாகராஜ் திருக்குறளில் செய்நன்றி அறிதல் என்ற தலைப்பில் உரையாற்றினார். தலைமையாசிரியர் விஜயலட்சுமி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற 56 மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கப்பட்டன. மாணவர் கிஷோர் நன்றி உரை கூறி நிகழ்ச்சியை நிறைவு பெற செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக