அமைச்சர் துரைமுருகன் பிடிவாரண்ட் சொத்து குவிப்பு வழக்கில் அமல்படுத்த உத்தரவு!
காட்பாடி , செப் 5 -
வேலூர் மாவட்டம் காட்பாடி கே வி குப்பம் துரைமுலை பகுதியை சார்ந்தவர் அரசி யல் தலைவர்களில் மூத்த தலைவராக வளம் வருபவர் இன்று திராவிட முன்னே ற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மற் றும் நீர்வளத்துறை அமைச்சர் பொறு தமி ழக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்த ரவிட்டுள்ளது. கடந்த 2007 முதல் 2009
வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரியை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2017 ஆம் ஆண்டு மேல்முறை யீடு செய்யப் பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கோரிக்கையை ஏற்ற சென் னை உயர் நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதி ரான சொத்து குவிப்பு வழக்கு விசார ணையில் உள்ளது. இந்த நிலையில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதி மன்றம் விசாரணைக்கு நேரில் ஆஜர்படு த்த உத்தரவிட்டது. அமைச்சர் துரைமுரு கன் ஆஜராகாத நிலையில், அவரது மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட் டை ரத்து செய்யக் கோரினார்.இதைய டுத்து, சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவார ண்ட்டை ரத்து செய்த நீதிமன்றம் துரை முருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை செப். 15 ஆம் தேதி அமல்படுத்த தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக