ரெட்கிராஸ் இரத்த பரிசோதனை நிலையம் செயல்படுத்தவும் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி மையம் வழங்க தீர்மானம்!
காட்பாடி , செப் 20 -
வேலூர் மாவட்டம் காட்பாடி கரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த இரத்த பரிசோதனை நிலையம் காட்பாடி காந்திநகரில் மீண்டும் தொடங்குவது எனவும் மகளிருக்கென இலவச தையல் பயிற்சி வழங்கவும் வேலூர் பாராளு மன்ற உறுப்பினர் மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் டி.எம்.கதிர் ஆனந்த் அவர்களை அழைப்பது என சங்க மேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட கிளையின் மேலாண்மைக்குழு கூட்டம் இன்று காட்பாடி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி னார்.துணைத்தலைவர் வழக்கறி ஞர் வி.பாரிவள்ளல் முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்று பேசினார். வேலூர் மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள இக்கிளையின் முன்னாள் அவை துணைத்தலைவர் ஆர்.சினிவாசனுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டார்.
இரத்த பரிசோதனை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாந்தா ஜெயக் குமார், ஜெயக்குமார் ஆகியோர் இரத்த பரிசோதனை மையம் மீண்டும் செயல்பட வைப்பது குறித்து பேசினர் மேலாண் மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர்.வீ.தீன பந்து, ஆர்.ராதாகிருஷ்ணன் எஸ்.ரமேஷ் குமார்ஜெயின், ஜி.செல்வம், ஜெ.குமர வேல், க.குணசேகரன், பி.என்.ராமச்சந் திரன், வே.ஆறுமுகம், டி.லிவிங்ஸ்டன் மோசஸ், ஆர்.லட்சுமி நாராயணன் ஆயுள் உறுப்பினர்கள் கே.எம்.ஜோதீஸ்வர பிள்ளை, கே.அந்தோனிபாஸ்கரன், எம்.திலகர், பிரபாகுமார், உமாபதி, எம்.ஈஸ்வரி, என்.ஞானவேல் ஆகியோர் பேசினர்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட காட்பாடி வட்ட முன்னாள் அவை துணைத்தலைவர் முனைவர்.இரா.சீனிவாசன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பது.
2.கரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ரெட்கிராஸ் இரத்த பரிசோதனை நிலையத்தினை மீண்டும் அக்டோபர் மாதத்தில் புதுப்பிக்கப்பட்ட பரிசோதனை மையமாகவும் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை மையமாகவும் திறப்பது என்றும் இவ் விழாவிற்கு ரெட்கிராஸ் மாவட்ட துணைத்தலைவர் மற்றும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் அவர்களை அழைப்பது.
3. இலவச தையல் பயிற்சி மையம் மகளிர் பயன் பெறும் வகையில் காட்பாடி ரெட்கிராஸ் - சேவகன் அறக்கட்டளை, பாத் பைன்டர்ஸ் சமூக சேவை அறக்கட்டளையுடன் இணைந்து காட்பாடி மோட்டூர் சாலையில் விரைவில் தொடங்குவது
4.2023 - 25 ஆண்டிற்கான நிர்வாக குழு நிறைவு பெற்று 01.01.2026 முதல் 31.12.2028 வரை புதிய மேலாண்மைக்குழு தேர்ந்தெடுக்க வட்ட பொதுக்குழு கூட்டத்தினை டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்துவது
5.ஆண்டு விழா டிசம்பர் மாதத்தில் நடத்துவது என்றும் அதற்கான விரிவான ஆண்டுமலர் வெளியிடுவது.
6.கூட்டங்கள் நடத்த ஏதுவாக தற்போதுள்ள அலுவலகத்தில் மேற்கூறை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
முடிவில் பொருளாளர் வி.பழனி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக