ரெட் கிராஸ் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் வயது மூப்பின் காரணமாக உயிர் இழந்த மூதாட்டியின் கண்கள் தானம்!
காட்பாடி , செப் 20 -
வேலூர் மாவட்டம் காட்பாடி இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் வாழ்நாள் உறுப் பினர் வேலூர் அம்மன் மெட்டல்ஸ் நிறு வனத்தின் உரிமையாளர் க.சிவராமன் அவர்களின் தாயார் ருக்மணி அம்மாள் வயது 90 (கணவர் மறைந்த கதிரேசன் செட்டியார்) உடல் நல குறைவால் இன்று அதிகாலை காலமானார் அன்னாரின் இரண்டு கண்களால் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்க ப்பட்டது.இந்தியன் ரெட் கிராஸ் சங்கத் தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் செயற் குழு உறுப்பினர்கள் குமரன் ஆர் ஸ்ரீனி வாசன் எஸ் ரமேஷ் குமார் ஜெயின் சாந்தி பாஸ்கர் ஆகியோரது முன்முயற்சியில் வேலூர் அகர்வால் கண் மருத்துவமனை யில் மருத்துவர் குழுவினர் தானமாக பெற்றுக் கொண்டனர் மறைந்த ருக்மணி அம்மாள் அவர்களின் பிள்ளைகள் ஜவஹர்லால் சிவராமன் ராம்பிரபு வசந்தி காமாட்சி ஆகியோர் கண்களை தானமாக வழங்கினர்.
சென்னை அகர்வால் கண் மருத்துவ மனை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் மறைந்த அண்ணா ரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத் தினர் மேலும் கண்தானம் செய்ததற்கான சான்றிதழை வழங்கினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக