நம்ம சாமி நம்ம கோயில் நாமே பாதுகாப்போம் என்ற அமைப்பின் கீழ் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை ஊர்வலம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

நம்ம சாமி நம்ம கோயில் நாமே பாதுகாப்போம் என்ற அமைப்பின் கீழ் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை ஊர்வலம்


நீலகிரி மாவட்டம் உதகையில் ஆகஸ்ட் 31 அன்று நம்ம சாமி நம்ம கோயில் நாமே பாதுகாப்போம் என்ற அமைப்பின் கீழ் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை ஊர்வலம்.                  


உதகையில் நேற்று இந்து அமைப்பு முன்னணியினர் சுமார் நூறு வாகனங்களில் விநாயகர் சிலை கரைப்பதற்காக எடுத்து வந்தனர் ஊர்வலம் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து முக்கிய சாலை வழியாக சென்று மத்திய பேருந்து நிலையம் அடைந்து அங்கிருந்து காமராஜர் சாகர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது ஊர்வலத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் மேட்பார்வையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் விழா இனிதே நடைபெற்றதால் பொதுமக்கள் காவல்துறையினருக்கும் ஊர்க்காவல் படையினருக்கும் தீயணைப்பு படையினருக்கும் நன்றியினை தெரிவித்தனர்.         


தமிழக குரல் இணையதள செய்திக்காக உதகை செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad