சேதுபாவாசத்திரம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

சேதுபாவாசத்திரம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்


சேதுபாவாசத்திரம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்


பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன், குப்பத்தேவன், சோலைக்காடு, செம்பியன் மாதேவிப்பட்டினம், விளங்குளம், செந்தலைவயல் ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மந்திரிபட்டினம் புயல் பாதுகாப்பு மையத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்  நடைபெற்றது. 


பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில், 330 மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் உள்ளிட்ட 723 பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அரசு அலுவலர்களிடம் அளித்தனர். மேலும், 300 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டையை வழங்கினார். 


முகாமில், திமுக ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன், தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயபாஸ்கர், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நாகேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் கவிதா, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் சுதாகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முரளி, ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அரசு அலுவலர்கள், மீனவ கிராமத் தலைவர்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


பேராவூரணி நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad