திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் சேரும் சுமார் 700 டன் முதல் 800 டன் வரையிலான குப்பைகளை அகற்றி கடந்த சில வாரங்களாக முதலிபாளையம் பாறைக்குழி பகுதியில் கொட்டப்பட்டு வந்தது இதனால் நோய் தொற்று உள்ளிட்ட சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்
இந்த நிலையில் திருப்பூர் மாநகரின் குப்பைகளை அகற்றுவது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரணவரே ஷங்கர் ராவ், இ.ஆ.ப.,அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் MLA , மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையர் அமித் இ.ஆ.ப, துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் ,மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக