ஆம்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாண வன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதி!
ஆம்பூர், செப் 12 -
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாண வனுக்கு போலி மருத்துவர் மருத்தவம் பார்த்ததால் உயிருக்கு ஆபத்தான நிலை யில் மருத்துவமனையில் அனுமதி, நடவ டிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் மாவட்ட எஸ்.பி. யிடம் புகார் மனு.தருமபுரி மாவட்டம் பாப்பிரட்டி ப்பட்டி அடுத்த அம்பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் மகன் ஈஸ்வரன்.
இவர் வேலூர் மாவட்டம் அகரம் பகுதியில் உள்ள டாக்டர்.எம். ஜி. ஆர். அரசு கலை கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.மாணவன் ஆம்பூர் சான்றோர்குப்பத்தில் உள்ள அரசினர் சமூக நீதி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த 26.08.2025 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விடுதி யின் அருகில் உள்ள குமரன் கிளினிக் யில் மருத்துவம் பார்த்து உள்ளார்.
அப்போது சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த மாணவனை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
பின்னர் உடல்நிலை மோசமான நிலை க்கு தள்ளப்பட்டத்தால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனை மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தற்போது உயிருக்கு ஆபாத்தான நிலையில் இருந்து வருகி றார்.இதனால் காலவாதியான மருந்து கள் கொண்டு மருத்துவம் படிக்காமலே மருத்துவம் பார்த்த பழனிவேல்ராஜன் என்பவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திருப்பத்தூர் வடக்கு மாவ ட்ட செயலாளர் ஓம். பிரகாஷ், கட்சியின் மேலிட பொறுப்பாளர் மு.நந்தன் உள்ளி ட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. யிடம் புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக