அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில திமுக வர்த்தக அணி இனச் செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், நகர் மன்ற தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ஏ.பி. ரமேஷ்,
நகராட்சி ஆணையர் ஆணையர் இலவேந்தன், திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள்ஆர் சுடலை, துணைச் செயலாளர் தோப்பூர் பெருமகராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, ஆனந்தராமச்சந்திரன், ரேவதி, முத்து ஜெயந்தி, திமுக நிர்வாகிகள் மகளிர் அணி வேலம்மாள், தோப்பூர் சுரேஷ் மற்றும் கால்நடை அரசு மருத்துவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக