மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலசிங் தொடங்கி வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 63வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி உடன்குடி கல்விளையில் நடைபெற்றது.
விழாவிற்கு உடன்குடி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் சங்கர் ( எ ) தமிழ்வாணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மனுமான டி.பி பாலசிங் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் விஜயன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ரஞ்சன், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் மானாடு பாலமுருகன், கிளை கழகச் செயலாளர்கள் ஜோசப்ராஜா, பொன் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கர் வரவேற்றார். இதில் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக