வாழ்விடம் இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு! தீர்வு கிடைக்குமா!
ராணிப்பேட்டை , செப் 1 -
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், தாலிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பணவட்டாம்பாடி கிராமத்தில் சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்த 50 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின் இவர்கள் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்து வருகின்றவர்கள். இம் மக்களுக்கு நிலையாக வாழ்விடம், மின் சார வசதி, சாலை வசதி, குழாய் இணை ப்பு இன்று வரை கிடைக்காமல் ஏரி அருகில் தற்காலிகமாககுடிசை அமைத்து வசித்து வருகின்றனர். அங்கு மழைக் காலங்களில் மழை நீர் அதிக அளவு இவர்கள் தங்கி உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் சூழும் நிலையில் உள்ளது. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மலைவாழ் மக்கள் சங்கத்தில் உறுப்பி னர்க் மாவட்ட குழு உறுப்பினர் கொள்ள புரி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியினர் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு அளித்து ள்ளனர். இதில் சிபிஎம் ஆற்காடு தாலுகா குழு உறுப்பினர் எஸ். முரளி தாஸ், ரவி கலந்து கொண்டார் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கப் பட்டது .
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக