உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குத்து வாங்கிய சமூக ஆர்வலரை அரசு மருத்து வமனையில் சந்தித்த தென்னிந்திய நுகர்வோர் நிறுவனத் தலைவர் !
ராணிப்பேட்டை , செப் 5
இராணிப் பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவனையில் அனுமதிக்கப் பட்ட வேங்கடபதி விவசாயி மற்றும் சமூக ஆர்வலர் உங்களுடன் ஸ்டாலின் என்று நிகழ்ச்சியில் மனு ஒன்றை அளித்தார் அதற்கு ரசீது கேட்டு காத்திருந்தபோது காவலர் ஒருவர் ஏன் இங்கு கத்தி கலாட் டா செய்கிறீர்கள் என்று அவரை தள்ளி மார்பில் குத்தினார் இதை அனைவரும் நாம் வீடியோவில் பார்த்திருப்போம் நடந் தது என்ன அரசு மருத்துவமனையில் நேரில் சென்று தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் K. வசந்தப்ரியா அவர்கள் சந்திப்பு இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சாத்தூரில் சர்வே எண்: 525 முதல் 603 வரை 438 ஹக்டர் பரப்பளவு உள்ள காட்டு காப்பு நிலம் அபகரிப்பு(Received forest) செய்யப்பட்டுள்ளது என 03/09/2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க சென்றவரை VAO தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய நேரலை காணோளி பதிவோ குரல் பதிவோ வெளி யிடாமல். மனு கொடுக்க சென்றவருக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டு அவரை தாக்கி ப்பட்டார். அரசு ஊழியர்கள் தன் பணியை சரியாக செய்யவில்லை என்றால் இந்திய தண்டனை சட்டம் 166 -ன் கீழ் அவர்கள் மீதும் வழக்கு பதிய சட்டத்தில் இடம் உள் ளது பெறப்படும் மனுக்களை பழைய பேப்பர்கடைக்கும் ஆற்றிலும் தான் கிடை க்கின்றது எந்த மனு மீதும் அதுவும் வரு வாய் துறையை பற்றி வரும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று தலைமை செயலகத்திற்கே தெரி ந்த தகவலுக்கு கிராம நிர்வாக அலுவலர் ஏன் மனுதாரரை தாக்க வேண்டும். தாக்க அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த முகாமிற்கு பாதுக்காப்புக்கு வந்த காவல் ஆய்வாளர் ஏன் மனுதாரரை தா க்க வேண்டும். பொது இடத்தில் மனு தாரரை தாக்க காவல் ஆய்வாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. மாவட்ட ஆட்சியரா? மாவட்ட காவல் கண்காணிப் பாளரா? காவல்துறை பொதுமக்களுக் கும் தானே பாதுக்காப்பு வழங்க வேண் டும் ஏன் ஒரு தலை பட்சமாக நடந்துக் கொண்டது. VAO வின் தவறால் இன்று மனுதாரர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. தாக்கிய காவல் ஆய்வாளர் கூறுகையில் தனது குறைந்த பட்ச பலம் கொண்டு தாக்கியதாக காவல் துறை மூலம் அறிக்கை வந்துவிட்டது. சட்டசபையில் வாக்குவாதம் வந்தால் குண்டுகட்டாக தூக்கி கொண்டு வெளி யில் தானே விடுவார்கள். தாக்க மாட்டார் இல்லையா? ஆனால் ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் மக்களை முகாம் என்ற பெயரில் கால நேரங்களை வீணாக்கி மனுக்களை கொ ண்டுவந்தால் அவர்களை தாக்கி குற்ற வாளியாக மாற்றும் இது போன்ற முகாம் கள் தேவையா? அரசு அலுவலகத்தில் பெறப்படும் மனு மீது நடவடிக்கை எடுத் தாலே இதுபோன்ற முகாம்கள் நடத்த தேவையே இல்லையே? முகாம் முகாம் என்று அரசு ஊழியர்கள் இப்படி வந்தால் எந்த துறையில் வேலை நடக்கும். எந்த மனு மீது நடவடிக்கை எடுக்க முடியும். தவறு செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஒருதலை பட்சமாக நடந்த காவல் உதவி ஆய்வாளர் மீது சட்டப்படியும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் துறை துணையிருக்கும் போது நாம் ஏன் பாதிக் கப்பட்ட மனுதாரருக்கு துணை இருக்க கூடாது. ஒரு மூத்த குடிமகன் மற்றும் மா ற்று திறனாளி மீது எப்படி வழக்கு பதிய லாம். அவர் அளித்த மனு மீது நடவடிக் கை எடுக்க நமது அமைப்புகளான விவ சாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர் கள் அமைப்புகள் துணையிருக்க வேண் டும் என்பது என பணிவான வேண்டு கோள். மேலும் அவர் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய உறுதுணை யாக இருக்க வேண்டும் என கேட்டுக்கி றேன் என தெரிவித்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக