திருப்பூரில் சிக்னலில் உள்ள முறைகேடான விளம்பர போர்டுகளை அகற்றக்கோரி சமூக ஆர்வலர் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா
திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான மின்சார இணைப்பிலிருந்து எவ்வித அனுமதியின்றி திருட்டு மின்சாரம் எடுத்து போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர போர்டுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றதை கண்டித்து தரையில் அமர்ந்து சமூக ஆர்வலரன ஈபி சரவணன் தர்ணா
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்
மாநகராட்சி காவல் துறை உள்ளிட்ட எவ்வித முறையான அனுமதியின்றி போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர போர்டுகளை தனியார் நிறுவனம் வைத்து பல லட்சக்கணக்கான பணம் வசூப்பது உறுதியான பிறகும் கூட நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார் அந்த மேலிடம்
இது குறித்து மாநகராட்சிக்கும், காவல் துறைக்கும் 45 புகார்கள் அளித்த பிறகும் கூட கண்டும் காணாமல் இருப்பதின் மர்மமென்ன..?
மக்கள் உயிருடன் விளையாடும் அவல நிலை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் மௌனம் காப்பது ஏன் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள சிக்னல்களில் திருட்டு மின்சாரத்தில் விளம்பர போர்டு வைத்து தனியார் நிறுவனம் பண வசூல் செய்வது வேடிக்கை பார்ப்பதை கை விட்டு உடனடியாக அனைத்து சிக்னல் போர்டுகளின் எண்ணிக்கைகளை கணக்கெடுத்து எத்தனை கோடி ரூபாய் பணம் தனியார் நிறுவனம் வசூலித்தது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு கூறியுள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக