ஈரோடு மொடக்குறிச்சியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

ஈரோடு மொடக்குறிச்சியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம்


ஈரோடு மாநகர் மாவட்டம் மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக எழுமாத்தூர் மற்றும் கணபதிபாளையம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...


நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பரிவார அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலத்தினை கொடியசைத்து  வைத்து துவங்கி வைத்தனர்



கணபதிபாளையம் பகுதி மையமாக காலை 10 மணிக்கு துவங்கிய ஊர்வலம் முக்கிய ஊர்களான காட்டூர், சாக்கவுண்டன்பாளையம், பச்சாம்பாளையம், பாசூர், பழனிக்கவுண்டன்பாளையம், கருமாண்டபாளையம்,  சோளங்காபாளையம்,

கருப்பகவுண்டன்பாளையம், பொன்னம்பாளையம், மானூர், வேலம்பாளையம், கணபதிபாளையம் வழியாக மாலை 5 மணிக்கு மன்னாதாம்பாளையம் வந்தடைந்தது

எழுமாத்தூர் பகுதி மையமாக முக்கிய ஊர்களான எழுமாத்தூர், கணபதிபாளையம் வழியாக மன்னாரம்பாளையம் வந்தடைந்தது

அனைத்து சிலைகளுக்கும் சிறப்பான பூஜை நடைபெற்றது பின்னர் காவிரி ஆற்றங்கரையில் நூற்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளின் விஜர்சன நிகழ்ச்சி‌ மிகவும் சிறப்பாக நடைபெற்றது

நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்...


தமிழக குரல் செய்தியாளர் 

புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad