இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி.ஜோதிமணி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "முத்தையாபுரம் -ஸ்பிக்நகர் - முள்ளக்காடுவரை நான்குவழிச்சாலையில் மேல்புறமாக கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் மிகுந்து மிகவும் போக்குவரத்து நெருக்கடியாக இருப்பதால், பல விபத்துக்களால் உயிரிழப்புக்கள் தொடர்ந்துக்கொண்டே வருகிறது.
இதற்கு இந்தப்பகுதியில் அணுகுசாலை இதுவரை அமைக்கப்படாததே காரணம். பள்ளிக்கு படிக்கச் சென்ற மாணவர் உட்பட பல உயிர்களை பல காலமாக இழந்துக்கொண்டே இருக்கிறோம்.
போக்குவரத்து நெருக்கம் மிக்க மேற்குப்பகுதியில், தவறான திசையில் தலை தெறிக்க வருபவர்கள், எதிர் திசையில் எதிர் எதிரே வருபவர்கள், யார்வந்து எப்பொழுது மோதுவார்களோ -எந்த வாகனம் வந்து எப்படி மோதுமோ என்ற பயத்திலே மக்கள் பயணிக்க வேண்டியது இருக்கிறது.
இது திருச்செந்தூர் செல்லும் முக்கிய சாலையில் இருப்பதால், தினம் திருவிழாக்காலம் போல் வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துக்களும் அணிவகுத்து நிற்கின்றன.
மதுக்கடை அருகில் இருப்பதால் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமுள்ளது. கால்நடைகளும் அதன் பங்குக்கு மறியல் செய்து சுற்றித் திரிகிறது.
அனைத்து வாகனங்களும் நிறுத்த இடமில்லாமல் சாலையை அடைத்தே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வெள்ளைக்கோடுவரை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப்பகுதிகளில் அணுகு சாலையோ அல்லது மேம்பாலமோ அமைத்து, விபத்து ஏற்படாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக