ஸ்ரீவைகுண்டம் செப் 26. நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதி ஆன ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நவராத்திரி திருவிழா தொடங்கியது.
4 வது நாளான இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 9 மணிக்கு திருமஞ்சனம்.10 மணிக்கு வைகுண்ட நாயகி. சோரநாத நாயகி தனித் தாயார் சன்னதிகளில் திருமஞ்சனம். பின்னர் அலங்காரம். தீபாராதனை. சாத்து முறை. பக்தர்களுக்கு தீர்த்தம். சடாரி. பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு சாயரட்சை. உற்சவர் கள்ளப்பிரான் முதல் 5 நாட்கள் வைகுண்ட நாயகியுடனும் மீதமுள்ள 4 நாட்கள் சோரநாத நாயகியுடனும் சயனக்குறட்டிற்கு எழுந்தருளி அலங்காரம். தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சீனிவாசன். பார்த்தசாரதி . சீனிவாச தாத்தம். சேவித்தனர். கோஷ்டி சாத்து முறை. பின்னர் தீர்த்தம். சடாரி. பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை அர்ச்சகர்கள். ரமேஷ். நாராயணன்.வாசு. ராமானுஜன். சீனு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார் கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன் . நிர்வாக அதிகாரி பொறுப்பு சதீஷ். ஆய்வாளர் நிஷாந்தினி. அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா. மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன் முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக