அம்பேத்கர் நகரில் அடிப்படை வசதிகள் கோரியும்! அரசு அதிகாரிகளின் அலட்சி யத்தை கண்டித்து விசிக சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம்!
வேலூர் , செப் 9 -
வேலூர் மாவட்டம் அம்பேத்கர் நகர் மக்க ளின் அவல நிலை – பட்டா, குடிநீர், கால் வாய், பொதுக் கழிப்பிடம் போன்ற அடிப் படை வசதிகள் கோரியும் அரசு அதிகாரி களின் அலட்சியப் போக்கு கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் க.கோட்டி (எ) கோ வேந்தன் தலைமையில் மற்றும் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் பிலிப்
முன்னிலையில் மாவட்ட செய்தி தொடர் பாளர் கா. நாகராஜன் மாவட்டத் துணைச் செயலாளர் அ.இளங்கோ ஆகியோர் வேலூர் மாவட்ட ஆட்சியரியடம் மனு அளி த்தனர். மனுவில் கூறியதாவது வேலூர் மாவட்டம் பாகாயம் அருகே மேட்டூர் இடை யன் பட்டி சாலையில் அமைந்துள்ள அம் பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு, நீண்ட காலமாக பட்டா வழங்கப் படாமல் அதிகாரிகள் அலட்சியமாக நடத்தி வருகின்றனர்.மேலும், அந்தப் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிக ளும் இல்லாததால் மக்கள் கடும் அவதி க்கு உள்ளாகின்றனர். பொதுக் கழிப்பிடம் கூட இல்லாததால் பெண்கள், குழந்தை கள் உள்ளிட்டோர் பொது வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மக் கள் பலமுறை மாநகராட்சி அலுவலகத் தில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம்.ஆட்சியர், விரைவில் அம்பேத்கர் நகர் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.ஆனால் வரும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படா விடின், அப்பகுதி மக்களை அதிக அள வில் ஒன்றிணைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். என தெரிவித்தனர்.மேலும் இந்த போரா ட்ட களத்தில் உறுதுணையாக இருந்த வேலூர் மாவட்ட நகர ஒன்றிய மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் போராளி சிறுத்தைகள் அனைவருக்கும் வே. வையாபுரி தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக