காக்கங்கரை பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக சித்தப்பாவை வெட்டிய மகன் !
திருப்பத்தூர் , செப் 24 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆவல் நாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த கௌரவன் மகன் மாத மற்றும் பூபதி இருவருக்கும் ஏற்கனவே நிலத்தகராளில் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது ஏற்கனவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாது என்பவர் பூபதியை காக்கங்கரை பகுதியில் தகராறு ஏற்பட்டு அவரை கட்டையால் தாக்கினார் இதனால் பலத்த காயம் அடைந்த பூபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இதனை கந்திலி காவல் நிலையம் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதை தன் மனதில் வைத்துக் கொண்டு பூபதி மகன் திருப்பதி என்பவர் தன் அப்பாவை தாக்கிய மாது என்பவரை மீண்டும் அதே பகுதியில் இன்று மாலை சுமார் 5.50 மணி அளவில் கத்தியால் தலை மற்றும் கால் கை ஆகிய பகுதியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் இதனைக் கண்ட பகுதி மக்கள் மாதுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத் தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பரிசோதித்த டாக்டர்கள் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இதனை அறிந்த கந்திலி காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்றதை தேடி வருகின்றனர்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக