இராமநாதபுரம் ஏர்வாடி தர்கா அரசு மனநல மருத்துவமனைக்கு வாஷிங் மெஷின் வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

இராமநாதபுரம் ஏர்வாடி தர்கா அரசு மனநல மருத்துவமனைக்கு வாஷிங் மெஷின் வழங்கல்.

இராமநாதபுரம் ஏர்வாடி தர்கா அரசு மனநல மருத்துவமனைக்கு வாஷிங் மெஷின் வழங்கப்பட்டது 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் மனநலநோயாளிகள் அவசர மற்றும் மீள் சிகிச்சை மையம் உள்ளது. 

இங்கு 70 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெற்று பயனடைந்து வருகின்றனர் அவர்களுக்கு கீழக்கரை கிழக்கு தெருவில் உள்ள ஆஷிக் நினைவு அறக்கட்டளை சார்பில் ஆரிப் என்பவர் பெரிய அளவிலான வாஷிங் மெஷின் வழங்கினார் 

மேலும் கீழக்கரையைச் சேர்ந்த யூனிக் அசோஸியேட்ஸ் நிறுவனர் பொறியாளர் அமீர் பாஷா மற்றும் சவுதி அரேபியா ரியாத்தில் கேனான் நிறுவனத்தின் தலைமை விற்பனை மின் பொறியாளர் முகமது ஜபருல்லா அவர்கள் பெட் சீட் தலையனை பெட்ஷீட் உறை 50 க்கு மேற்பட்டோருக்கு வழங்கினார் 

உடன் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் பிரகலாதன், துணை இயக்குனர் குடும்ப நலத்துறை சிவானந்தவல்லி தேசிய நல குழும மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ராம்நாத் ஏர்வாடி மனநல மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசைன் மனநல மருத்துவர் அர்ஷித் காட்கில் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் காப்பக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad