திருப்பத்தூர் அருகே ஆறு மாத காலமாகி யும் கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்!
திருப்பத்தூர் , செப் -
திருப்பத்தூர் அருகே ஆதியூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை போடப் பட்ட நிலையில் சகோதரர்கள் இரண்டு பேர் பணிசெய்ய விடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத் திற்குட்பட்ட ஆதிவூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசி த்து வருகின்றனர். இந்த நிலையில் கட ந்த 2007 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர் ந்த ரமேஷ் என்பவர் 20 அடி அகலமும் 100 அடி தொலைவும் கொண்ட தனக்கு சொந் தமான இடத்தை பொது வழியாக பொது மக்கள் பயன்படுத்தி கொள்வதற்காக முறைப்படி பட்டாபதிவு செய்து கொடுத் துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெ ண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதுமேலும் அப்பகுதியில் கால்வாய்வசதி இல்லாத தால் மழைக்காலங்களில் மழைநீர் குடி யிருப்பு பகுதிகள் செல்வதால் அப் பகுதி யில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக தங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த ஆறு மாதங்க ளுக்கு முன்பு பதினைந்தாவது நிதி குழு மானியத்திலிருந்து ரூபாய் 4.75 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய் அமை ப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டது.
இந்த நிலையில் ரமேஷின் சகோதரர்க ளான மணிவண்ணன் மற்றும் ஜெகதீசன் இங்கு கழிவு நீர்கால்வாய் அமைக்க கூடாது எனவும் கழிவுநீர் அமைக்கக் கூடிய இடம் தங்களுக்கு சொந்தமானது எனவும் பிரச்சனையை செய்து வருவ தால் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட முடியாமல் உள்ளது. ஏற் கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு ரமேஷ் அந்த இடத்தை பொது வழியாக பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என பத்திர பதிவு செய்து கொடுத்துள்ள நிலையில் தற்போது அவருடைய சகோத ரர்கள் இரண்டு பேர் பணிசெய்ய விடா மல் தடுத்து வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இன்று திடீரென திருப் பத்தூரில் இருந்து ஆதியூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதின் பேரில் அங்கி ருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக