கன்னியாகுமரி மாவட்டம்: ஓணம் பண்டிகை முன்னிட்டு பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் வைத்து ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாணவிகளுக்கான கோலப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தென்குமரி கல்விக்கழக தலைவர் ஜெயசீலன் அவர்களும், தென்குமரி கல்விக் கழகச் செயலாளர் டாக்டர். பி.டி.செல்வகுமார் அவர்களும், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் தர்மலிங்க உடையார் அவர்களும், பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக