மெஞ்ஞானபுரம் அருகே நங்கை மொழியில் அமைந்துள்ள ஜெய் இன்டர்நேஷனல் பள்ளியில் சாரண, சாரணியர் இயக்க சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி முதல்வர் சிவ அபிநயா வரவேற்றார். திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன் தலைமை உரை ஆற்றினார். அவர் பேசுகையில், சாரணர் இயக்கத்தின் மதிப்பு, முக்கியத்துவம் மற்றும் அமைப்பு ஆகியவற்றை குறித்து எடுத்துக் கூறினார். சாரணர் இயக்கத்தில் இணைந்து பயன்பெறும் மாணவர்களுக்கான விருதுகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை குறித்து எடுத்துக் கூறினார்.
சாரணியரியக்கத்தின் மூத்த பொறுப்பாசிரியைகள் காந்திமதி மற்றும் வளர்மதி ஆகியோர் சரணியர் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர். திருச்செந்தூர் கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் துணைச் செயலாளர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார்.
சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார், பிற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி கோகிலா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக