மலேசியா- இந்தியா கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக மலேசிய நாட்டின் சாரணியர் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் உயர்நிலை அலுவலர்கள் தமிழகம் வந்து பல்வேறு பகுதிகளையும் கலாச்சார அமைப்புகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூருக்கு வருகை புரிந்த மலேசிய சாரணியர் இயக்க நிர்வாகிகளை திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன், துணை செயலாளர் ஜெர்சோம் ஜெபராஜ், பொறுப்பாசிரியர்கள் காந்திமதி,தமிழ் மாறன் ஆகியோர் வரவேற்றனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், கடற்கரைப் பகுதி மற்றும் கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு புணரமைப்பு பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, கோவில் யானை தெய்வானையிடம் ஆசி பெற்றனர்.பின்னர், மலேசிய நாட்டின் சாரணியர் இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழா ஸ்கார்ப் திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க பொறுப்பாளர்களுக்கு அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
கலாச்சார பயணத்தில், மலேசிய நாட்டின் சாரணியர் இயக்க துணை தலைவர் டத்தோ ஜெயதேவி தலைமையில், உயர்நிலை அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, பரிமளா, விமலா, இந்திரா தேவி, ஞான அஸ்வினி, லட்சுமி பிரபா, சரண்யா மற்றும் சிவகாமி ஆகியோர் வருகை புரிந்திருந்தனர்.திருச்செந்தூர் பயணத்தை நிறைவு செய்த பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக