கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்த நிதியில் பி.டி. செல்வகுமார் கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்த நிதியில் பி.டி. செல்வகுமார் கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்த நிதியில் பி.டி. செல்வகுமார் கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்

கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்திற்கு சொந்த நிதியில் கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் டாக்டர்.பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினார்,

தலைமை ஆசிரியர் பேன்சி ஹெப்சிபா டேவிட் தலைமை தாங்கினார், உதவி தலைமை ஆசிரியர் அகஸ்டின்செல்வகுமார் முன்னிலை வகித்தார், 

இந்நிகழ்வில்,குமரி மாவட்ட தலைவர் வாக்கில் பாலகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன்,
மற்றும் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரம்,

பள்ளி மேலாண்மை குழு தலைவர், ரேவதி மற்றும் உறுப்பினர்கள், கல்வியாளர் பாலசுப்ரகர், முன்னாள் மாணவர் பரமசிங், ராஜசேகர், உறுப்பினர்கள் லிங்க ராணி, சாம்சன்,ரூபி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad