மகளிர் சுய உதவி குழுக்களின் மதி அங்காடியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காந்தி உடன் மாவட்ட ஆட்சியர்!
ராணிப்பேட்டை , செப் 22 -
ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் மதி அங்காடியை திறந்து வைத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாலா ஜா ஊராட்சி ஒன்றியம், திருப்பாற்கடல் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழுக்க ளின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் மதி அங்காடி கட்டிடத்தினை திறந்து வைத்து 254 பயனாளிகளுக்கு ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் தொழிற் கடனுதவி வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில் குமரன், வருவாய் கோட்டாட்சியர் ராஜி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரியங்கா, தனஞ்செழியன் எம்.சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் PK.பொன்னன், அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கணேஷ் பன்னிர் செல்வம் தீனதயாளன், கிளை செயலா ளர்கள் லோகேஷ் ருத்திரமூர்த்தி செந்தில் மற்றும் கழகத்தினர் இருந்தனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக