கட்டிய பணத்தை திரும்ப கேட்டால் கண்ட படி பேசும் நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில் கண்ணீருடன் மனு!
திருப்பத்தூர் , செப் 6 -
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம், வன்னினாதபுரம் பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கூலி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள்
அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 46) என்பவரிடம் சீட்டு கட்டி வந்துள் ளனர். அந்த இடத்தில் போட்டோ ஸ்டுடி யோ தொழில் செய்யும் தனசேகர் அதே பகுதியில் பலரிடம் சீட்டு நடத்தி மோசடி யில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூலி தொழில் செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள் 2 முதல் 10 லட்சம் வரை அவரவர்களின் தகுதிகேற்ப சீட்டு கட்டி வந்துள்ளனர். மக்கள் கட்டிய பணத்தில் சொகுசு பங்களாவும் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை யில் சீட்டு கட்டிய நபர்கள் சீட்டு முடிந்தும் கூட இன்னும் பணம் கொடுக்காதது ஏன் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் திமி ராக அதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த மக்கள் மோசடி நபர் குறித்து திருப்பத்தூர் மாவ ட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித் துள்ளனர்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக