சின்ன கண்ணால பட்டி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்சட்டமன்ற உறுப்பினர்கள்!
திருப்பத்தூர் , செப் 6 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடு த்த சின்ன கண்ணால பட்டி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது.இதில் ஆதியூர் குனிச்சி , பெரிய கண்ணால பட்டி, 11 கிரா மங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பொதுமக் கள் மருத்துவ முகாமில் கலந்து கொண் டனர். இந்த மருத்துவ முகாமில் எலும்பி யல் மற்றும் நரம்பியல், பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை, பொது அறுவை சிகிச்சை, இருதயம் மற் றும் எக்கோ பரிசோதனை, நுரையீரல் நீரிழிவு நோய், சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட சிகிச்சைகள் மருத்துவ முகா மில் நடைபெற்று வருகிறது.மாவட்ட ஆட் சியர் சிவசௌந்தரவல்லி, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச் சியில் கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன். கந்திலி சேர்மன் திருமுருகன். நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குமார். கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவா சன். கந்திலி ஒன்றிய செயலாளர் முருகே சன். குணசேகரன். துறை சார்ந்த அதிகா ரிகள் பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவ காப் பீடு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்ச த்து பெட்டகம், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உடன் இந்த மரு த்துவ முகாமில் துறை சார்ந்த அரசு அதி காரிகள் மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக