லயன் சங்கம், உதவும் கருணை உள்ளம் அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் மற்றும் இலவச கண் மருத் துவ முகாம் !
வேலூர் , செப் 6 -
மாநகராட்சி துணை மேயர் எம் சுனில் குமார் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் அமைந்துள்ள ஆர்.ஐ.சி.டி. கல்விநிறுவன வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ கண் மருத்துவர் முகாம் இன்று 06.09.2025 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் தொடக்கிவைத்தார்.
ஆர் ஐ சி டி கல்வி நிறுவனம், வேலூர் ரத்த மையம்இ டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, காட்பாடி ஜங்ஷன்லயன் சங்கம், உதவும் கருணை உள்ளம் அறக் கட்டளை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தினர் விழாவிற்கு இயக்கு னர் கே.எஸ். அஸரப் தலைமை தாங்கி முதலாவதாக இரத்த தானம் செய்தார். வேலூர் ரத்த மைய ஒருங்கிணைப்பாளர் கே.சிவன் வரவேற்றுப் பேசினார், காட் பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்த லைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனி வாசன், உதவும் கருணை உள்ளம் அறக் கட்டளையின் நிறுவனர் பி.ராஜி, அகில் ரத்தப் பரிசோதனை மைய மேலாளர் என்.பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம் சுனில் குமார் பங்கேற்று ரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். அப் போது அவர் கூறியதாவது நானும் இது வரை 7முறை இரத்த தானம் செய்துள் ளேன். இரத்த தானம் செய்வது பாராட்டத் தக்கது. பல உயிர்களை காப்பாற்ற உதவு கிறது. நாம் இரத்த தானம் செய்வதன் மூலம் நமது உடல் இரத்த தானம் செய்ய தகுதியானது என பரிசோதனைகள் மேற் கொண்ட பின் தான் பெறப்படுகிறது. எனவே அனைவரும் இரத்த தானம் செய் ய முன்வர வேண்டும் என்றார் காந்தி நகர் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலை வர் என் பரமசிவம் லயன் சங்கத்தின் மாவட்ட ஆளுநர் என்.டி. பாஸ்கரன் மண் டல தலைவர் ஏ காசி ஏ ரத்தினம், விஸ்வ நாதன் ஊரிசு கல்லூரி பேராசிரியர் டி திருமாறன் எழுத்தாளர் சி பி தேசி வே லூர் ரத்த தான குழு தலைவர் டாக்டர் ஆல்பஸ் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்கள்.வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர் பாத்திமா கண் பாதுகாப்பு பராமரிப்பு குறித்து விளக்கிப் பேசினார்.முகாமிற் கான ஏற்பாடுகளை வி. மகேஷ் குமார் கே நவீன் குமார் கே விஜய் பி பால்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக