தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரில் இளைஞர்களுக்கு இடையே மோதல் ஒருவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 செப்டம்பர், 2025

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரில் இளைஞர்களுக்கு இடையே மோதல் ஒருவர் கைது.

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரில் இளைஞர்களுக்கு இடையே மோதல் ஒருவர் கைது.

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் குமார்( 19) இவர் நேற்று இரவு பக்கத்து வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் மகன் பிரபு (20) இருவருக்கு இடையே பகை இருந்ததாக தெரியவந்தது. 

இதனால் மது போதையில் கார்த்தி குமார், பிரபுவைச் சரமாரியாக தாக்கியதால் பிரபு என்பவருக்கு காயம் ஏற்பட்டன.

இதில் தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கார்த்திக் குமார் என்பவரை கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் செய்தியாளர் கணேஷ்.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad