வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 செப்டம்பர், 2025

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு!

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு!
வேலூர் , செப் 8 -

வேலூர் மாவட்டம் ஜாக்டோ-ஜியோ பேர மைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறு திகளான பழையஓய்வூதிய திட்டம்அனை வருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றிட கோரி இன்று 08.09..2025 மாலை  5.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சி யர் வே.அர.சுப்புலட்சுமி அவர்களிடம் பெருந்திரள் முறையீடாக கோரிக்கை மனு அளித்து பேசினர். ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெய காந்தன்,, ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனி வாசன், ஆகியோர் கூட்டு தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.பாக்கி யராஜ் முன்னிலையில் மாநில உயர்மட் டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனா ர்த்தனன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், தமிழ்நாடு வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அக்ரி.இரா மன், உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமதுஷாநவாஸ், ஆதிதிராவிடர் நல சங்க பொதுச் செய லாளர் துரை கருணாநிதி ஆகியோர் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் வே.அர.சுப்புலட்சுமி அவர்களிடம் பெருந் திரள் முறையீடாக கோரிக்கை மனு அளி த்தனர்.
 கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி வைப்பதாக ஆட்சியர் அவர்கள் கூறி னார்.முன்னதாக ஜாக்டோ ஜியோ பேரமைப்பினர் ஆட்சியர் ஆலுவலக வளாகத்தில் கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ். தீனதயாளன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார் மாநில துணை தலைவர் டி.ஜெயபிர காஷ்,   தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை ப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், செயலாளர் தனசேகரன்,  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொருளாளர் எஸ்.சபீதா,  தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட செய லாளர் ஜி.சீனிவாசன்,  லட்சுமிவெங்க டேஷ் மருந்தாளுநர் சங்க வேந்தன், ஊரக வளர்ச்சித்துறை பா.வேலு, சத்துணவு ஊழியர் சங்க கே.சுமதி ஆகியோர் உள்பட பலர் பேசினர்.  தேர்தல் கால வாக்குறுதியான பழைய பயனளிப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை களை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பெருந் திரளாக சென்று முறையீடு செய்வது என்ற மாநில முடிவில் அடிப்படையில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி மாலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழியாக தமிழக அரசிடம் முறையீடு செய்தோம்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad