தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் முதல் இரண்டாம் பரிசு பெற்ற திருப்பூர் மாநகர காவல் துறையினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் முதல் இரண்டாம் பரிசு பெற்ற திருப்பூர் மாநகர காவல் துறையினர்


மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 2025–ம் ஆண்டிற்கான திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியருக்கான பிரிவில் கலந்து  முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த திருப்பூர் மாநகர காவல் துறையினரை மாநகர காவல் ஆணையர் எஸ். இராஜேந்திரன் இ.கா.ப.அவர்கள் பாராட்டினர். 


திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியருக்கான பிரிவில் 2025–ம் ஆண்டிற்கான மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் (CM TROPHY)  நடைப்பெற்றது.  இந்தப் போட்டிகளில் கலந்துக்கொண்ட திருப்பூர் மாநகர காவல் ஆயுதபடையில், பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் அமித்குமார் (SHORTPUT-MENS) போட்டியில் முதலிடம் பெற்று  தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தடகளம் (100 Mtr) போட்டியில் பணிபுரியும் இரண்டாம் நிலை பெண் காவலர் திருமதி.சோபியா தங்க பதக்கம் மற்றும் தடகளம்(1500 Mtr) வெண்கலம் பாதகம் பெற்றார்.  மேலும் திருப்பூர் மாநகர ஆயுதப்படைக் பெண் காவலர் செல்வி.முத்தமிழ் நீளம் தாண்டுதல்(LONG JUMP) போட்டியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் பதக்கங்களை வென்ற காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad