அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்.
களப்பணிகளை மாமன்ற உறுப்பினர் தொடக்கம்!
காட்பாடி , செப் 26 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக காட்பாடி தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.அன்பு துவக்கி வைத்தார்.பள்ளியின் தலைமை யாசிரியர் தாரகேஸ்வரி தலைமை தாங்கினார் திட்ட அலுவலர் என்.ஜெய் சங்கர் வரவேற்று பேசினார்.ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் முனைவர் செ. நா. ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற தொழிற் கல்வி ஆசிரியர் ச.சச்சிதானந்தம் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜி.டி.பாபு பள்ளி உதவியாளர் ராஜசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர், முடிவில் உதவி திட்ட அலுவலர் ஆர்.விஜயகுமார் நன்றி கூறினார். பள்ளியின் களப்பணிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.அன்பு தொடக்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக