அரசு மகளிர் பள்ளி மாணவிகள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் மண்டலக் குழு தலைவர் புஷ்பலதா தொடக்கம்!
காட்பாடி , செப் 26 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் துவக்கி வைத்தார் பள்ளியின் தலைமையாசிரியர் கோ. சரளா தலைமை தாங்கினார் திட்ட அலுவலர் எம்.அன்னபூரணி வரவேற்று பேசினார்.
ஜூனியர் ரெட் கிராஸ் அமைப் பின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் முனைவர் செ. நா. ஜனார்த்தனன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.தாமஸ் எ சதீஸ்குமார், உறுப்பி னர்கள் மகேந்திரன், பாலாஜி, ரூபன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுகந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர், முடிவில் உதவி திட்ட அலுவலர் கலை வாணி நன்றி கூறினார். பின்னர் பள்ளி வளாகத்தினை தூய்மை படுத்தும் பணியினை வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதாவன்னியராஜ் தொடக்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக