குடியாத்தம் வனப்பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
குடியாத்தம் , செப் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன ரேஞ்சர் பிரதீப் குமார் மற்றும் வனத்துறை யினர் நேற்று குடியாத்தம் வன பகுதிக்கு உட்பட்ட சூறாளூர் வனப்பகுதியில் வன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந் தன அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றி தெரிந்து கொண்டிருந்த நபரை பிடித்து விசார ணை செய்ததில் , பின்னர் குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் உள்ள வன அலுவலகத்திற்கு பழனியை பிடித்து சென்று விசாரணை செய்ததில் குடியாத்தம் அடுத்த உப்பிரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 58)என தெரியவந்தது மேலும் விசாரணை செய்ததில் வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றியை வேட்டையாடி அதனை வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது இது குறித்து வனத்துறையினர் பழனி மீது வழக்குப் பதிந்து கைது செய்து இவரிடம் இருந்த பைக் பன்றிக்கறி மற்றும் இதற்கு பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்து பழனிக்கு 4 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர் மேலும் விசாரணையில் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமம் மாரியம்மன் பட்டி கிராமத்தில் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர். கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக