தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் இருசக்கர வாகன விபத்து! உடல் உறுப்புகள் தானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் இருசக்கர வாகன விபத்து! உடல் உறுப்புகள் தானம் !

தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் இருசக்கர வாகன விபத்து! உடல் உறுப்புகள் தானம் !
வாலாஜா, செப் 26 -

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையை அடுத்த  தாங்கல் பகுதியை சேர்ந்த  ஏழுமலை முனுசாமி (வயது 47) தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இவர் ஆற்காடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந் தபோது சாலை விபத்தில் சிக்கினார். தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மாடுகள் குறுக்கே வந்ததால் மோதாமல் சறுக்கி  கீழே விழுந் தார். செப்டம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 1:15 மணியளவில் சி.எம்.சி. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இருப் பினும், 25 ஆம் தேதி இரவு சுமார் 9 மணி யளவில் அவருக்கு  மூளைச்சாவு ஏற்பட்ட தாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர் இதனை தொடர்ந்து எம்.ஜி.எம் மருத்து வமனைக்கு இதயமும் , சென்னை காவேரி மருத்துவமனைக்கு நுரையீர லும், வேலூர் ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் , சென்னை காவேரி மருத்து வமனைக்கு ஒரு சிறுநீரகமும், வேலூர் சி.எம்.சி.க்கு கண்கள் ஒதுக்கப்பட்டுள் ளன  அவரது மனைவி  சங்கீதா திமிரி யில் உள்ள பி.எச்.சி யில்  உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இரு  மகன்கள் உள்ளனர்.  இதனால் அப்பகுதி யில் பெரும் சோகத்தில் ஊர் மக்கள் வருத்தம் தெரிவித்தனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad