வேலூர் புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பங்கேற்பு!
வேலூர் , செப் 29 -
வேலூர் மாவட்டம் வேலும் கோட்டை மைதானத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தக திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி சிறப்பு செய்தனர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் கே.விஸ்வநாதன் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் செயற்குழு உறுப்பினர் பெ.ராமு, வி.எஸ். வெங்கடே சன் ஆகியோர் புத்தகங்களை வாங்கினர்
வேலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடைபெறும் நான்காம் ஆண்டு புத்தக திருவிழாவில் பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பதிப்பாளர் கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளின் பல லட்சம் புத்தகங்கள் காட்சி படுத்தி உள்ளனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் குடியாத்தம் கிளை பொறுப்பாளர் கவிஞர் முல்லைவாசன் மாவட்ட செயலா ளராக நீண்ட காலம் பணியாற்றிய கருவூலக் கணக்கு அலுவலர் ஓய்வு பெற்ற முத்து.சிலுப்பன் மாவட்ட தலைவர் முனைவர் பேராசிரியர் பே.அமுதா எழுத்தாளர் அழகிய பெரியவன் கவிஞர் நீதிமணி, உள்ளிட்ட அறிவியல் இயக்க நிர்வாகிகள் பங்கேற்று கலை இலக்கிய சிந்தனை அரங்கத்தில் உரையாற்றுகி றார்கள்.அக்டோபர் ஏழாம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி சிறப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக