வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 செப்டம்பர், 2025

வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!

வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!
வேலூர் , செப் 10 -

வேலூர் மாவட்டம் டி.கே.எம்.மகளிர் (தன்னாட்சி) கல்லூரியின் விலங்கியல் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் வேலூர் மாவட்டம் மற்றும் கல் லூரி கிளையும், வேலூர் உதவும் உள்ள ங்கள் அமைப்பும் இணைந்து  சர்வதேச தற்கொலை தடுப்பு வாரத்தின் ஒரு பகுதி யாக இளம் உள்ளங்களை புரிந்துக்கொள் வோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் 10.09.2025 புதன் கிழமை காலை 10 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலா ளர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் வேலூர் ஈவேரா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியை ஐ.தனலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கல்லூரியின் செயலாளர் பொறியாளர் டி.மணிநாதன், முதல்வர் முனைவர் ஆர். பானுமதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கலந்துரையாடல் அமர்வில் மேல்விஷா ரம் மனநல மையத்தின் மனநல ஆலோச கர் மற்றும் சிகிச்சையாளர் மருத்துவர் எஸ்.சுபைதா சுல்தானா, உதவும் உள்ளங் கள் அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரசே கர், அகில இந்திய வழங்கஞர் கூட்டமைப் பின் மாநில செயலாளர் மற்றும் மகளிர் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலை வர் ஆர்.ஜமுனாசெந்தில்குமார் ஆகியோ ர் பங்கேற்று பேசினர்.கல்லூரி  பேராசி ரியர் டி.சசிகலா, நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைந்தார்.கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர்கள் கிருத்திகாவினோ தினி ரேகா வித்யா துறைத்தலைவர் பி சசிகலா உள்ளிட்டோர் 14 வகையான போட்டிகளை நடத்தினர்.
உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD) 2003 ஆம் ஆண்டு உலக சுகாதார அமை ப்பு (WHO) உடன் இணைந்து சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கத்தால்  நிறுவப் பட்டது   . ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி, தற்கொலைகள் தடுக்கக் கூடியவை என்ற தனித்துவமான செய்தி யை வழங்குவதன் மூலம், இந்த பிரச்சி னையில் கவனம் செலுத்துவதையும், களங்கத்தைக் குறைப்பதையும், நிறுவன ங்கள், அரசாங்கங்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத் துவதையும் நோக்கமாகக் கொண்டு ள்ளது.தற்கொலை என்பது சமூக, உணர் ச்சி மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பெரிய பொது சுகாதா ரப் பிரச்சினையாகும். தற்போது உலகள வில் ஆண்டுக்கு 7,00,000 க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு தற்கொ லையும் இன்னும் பலரை ஆழமாக பாதிக் கிறது என்பதை நாங்கள் அறிவோம்.
2021-2023 வரையிலான உலக தற்கொ லை தடுப்பு தினத்திற்கான மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கடைப்பிடிக் கப்படும் கருப்பொருள் "செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்". இந்த கருப்பொருள், தற்கொலைக்கு ஒரு மாற்று உள்ளது என்பதையும், நமது செயல்கள் மூலம் நம்பிக்கையை ஊக்கு விக்கவும், தடுப்பை வலுப்படுத் தவும் முடி யும் என்பதையும் செயலுக்கான சக்தி வாய்ந்த அழைப்பாகவும் நினைவூட்டுவ தாகவும் செயல்படுகிறது.செயலின் மூலம் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், தற்கொலை எண்ணங்களை அனுபவிக்கும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையும், நாம் அவர் களைப் பற்றி அக்கறை கொண்டு, ஆதரிக்க விரும்புகிறோம் என்பதையும் சமிக்ஞை செய்யலாம். நமது செயல்கள், அவை எவ்வளவு பெரியதாக இருந்தா லும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, போராடுபவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக்கூடும் என்பதையும் இது அறிவுறுத்துகிறது.இறுதியாக, தற்கொ லை தடுப்பு என்பது ஒரு பொது சுகாதார முன்னுரிமை என்பதையும், தற்கொலை இறப்பு விகிதங்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கு அவசர நடவடிக்கை தேவை என்பதையும் இது நினைவூட்டு கிறது. இந்த திசையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க நாடுகளை ஆதரிக்க WHO அதன் கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றும்.இது தொடர். பாக கல்லூரி மாணவர்களிடையே 14 வகையான போட்டிகள் நடைபெற்றது பட்டிமன்றம் வீடியோ தயாரித்தல் கோலப் போட்டி பெயிண்டிங் சுவரொட்டி வரைதல் பென்சில் படம் வரைதல் பேச்சுப்போட்டி சின்னம் வரைதல் கட்டுரை போட்டி முழக்கம் எழுதுதல் கையெழுத்து போடு தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துதல் உள்ளிட்ட 14 வகையான போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற 60 மாணவிகளுக்கு சான்றிதழும் நினைவு பரிசினையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் ஜனார்த்தனன் புலவர் தனலட்சுமி உள்ளி டோர் வழங்கினர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad