இஸ்ரோ தலைவர் நாராயணன் அவர்கள் இன்று கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை-133 அடி உயரமுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தை குடும்பத்துடன் வந்து பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்"
குலசேகரப்பட்டினத்தில் 2,300 ஏக்கரில் ரூ.1000 கோடி செலவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இது செயல்பட தொடங்கும். 500 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் அங்கிருந்து ஏவப்படும் என்றார்.
மேலும் இந்த கண்ணாடி பாலம் அமைத்த தமிழக அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக