தொலைந்த நகை மீது புகார் கொடுத்தும் காவல்துறை எந்தெந்த நடவடிக்கை எடுக் கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம்மனு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

தொலைந்த நகை மீது புகார் கொடுத்தும் காவல்துறை எந்தெந்த நடவடிக்கை எடுக் கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம்மனு

தொலைந்த நகை மீது புகார் கொடுத்தும் காவல்துறை எந்தெந்த நடவடிக்கை எடுக் கவில்லை என  மாவட்ட ஆட்சியரிடம்மனு 
திருப்பத்தூர் , செப் 23 -

28 சவரன் தங்க நகை தொலைஞ்சு போச்சு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்தும் நடவடிக்கை இல்ல அதனால மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பெண் மனு

திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி அடுத்த புதூர் மூக்கனூர் பகுதியைச் சார்ந்த மாணிக்கம் மனைவி பரிமளா இவர்களின் வீட்டில் 3.9.25 புதன்கிழமை 28 சவரன் தங்கநகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது இதுகுறித்து ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரை யிலும் புகாரின் மீது எந்த ஒரு நடவடிக் கையும்  எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தார்  மேலும் பரிமளா கூறியதாவது 
நான் என் மகளுக்கு திருமணம் செய் வதற்காக சிறுகு  சிறுகாக சேர்த்து வைத்த 28 சவரன் தங்க நகையை திருடி சென்றுள்ளார்கள் இதுகுறித்து ஜோலார் பேட்டை காவல் நிலையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை கேட்டால் நாங்கள் பார்க்கிறோம் போ என்று அலட்சியமாக பதில்  கூறுகிறார் எங்கள் 28 சவரன் தங்க நகையை கண்டுபிடித்து கொடுக்கவில்லை என்றால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுவோம் என கண்ணீர் மல்க கூறுகிறார் ஜோலார்பேட்டை காவல் நிலையம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதன் காரணமாகமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளேன் எனக்கு தகுந்த நடவடி க்கை எடுத்து எங்களுடைய 28 சவரன் நகையை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad