ஆசிரியர் சங்கமம் விளையாட்டு கலை இலக்கிய விழா தமிழ்நாடு அரசின்விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு!
கே வி குப்பம் , செப் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே வி குப்பம் வட்ட அளவிலான அனைத்து வகை ஆசிரியர் இணைந்த கூட்டமைப் பின் சார்பில் பத்தாம் ஆண்டு ஆசிரியர் தின விழா மற்றும் பரிசு வழங்கும் விழா குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
விழாவிற்கு ஆசிரியர் சங்கமம் அமைப் பின் தலைவர் ஆர் ஜெயக்குமார் தலை மை தாங்கினார் செயலாளர் விஜயகாந்த் வரவேற்றுப் பேசினார் கௌரவ தலைவர் பொன் தசரதன் விழா துவக்க உரையாற் றினார் போட்டியில் வென்ற ஆசிரியர்க ளுக்கும் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி இயக்குனர் எம் கார்த்திகேயன் கிரீன் வேலி பள்ளி களில் தாளாளர் ஆயிஷா ஜாவித், ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் குடியாத்தம் லயன் சங்க தலைவர் ரவீந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்
நெல்லூர் பேட்டை தலைமை ஆசிரியர் வி உஷா திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர் செந்தில்குமார் கே வி குப்பம் வட்டார கல்வி அலுவலர் பி சுமதி ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் முல்லை வாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர் விழாவில் தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ் ணன் விருது பெற்ற குடியாத்தம் தரணம் பேட்டை தொடக்கப்பள்ளி தலைமையாசி ரியர் எம் எல் அப்துல் ரஷீத் கீழ் முட்டுக் கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜே பார்வதி, பணி நிறைவு பெற்ற செயலாளர் ஜெ.காந்தி ஆகியோருக்கு கேடயம் கதர் ஆடை அணி வித்து பாராட்டப்பட்டனர்.பட்டிமன்றம்
முன்னதாக இன்றைய நிலையில் பெரிதும் தேவை சொத்து சுகமா சொந்த பந்தமா என்ற தலைப்பில் முனைவர் தமிழ் திருமால் தலைமையில்பட்டிமன்றம் நடைபெற்றது சொத்து சுகமே என்ற தலைப்பில் கவிஞர் பாரி பாரதிதாசன் பேரவை தலைவர் பா முகமது அலி கே. தவசம் ஆகியோர் பேசினர் சொந்த பந்தமே என்ற தலைப்பில் ஜே பார்வதி இராம வேணுகோபால் வி தமிழரசி ஆகியோர் பேசினர் போட்டியின் நடுவர் களாக செயல்பட்ட பி புனிதவதி கே என் ரமேஷ் மோகன் எம் மகேந்திரன் ஜே முரசொலி மேரி சலூஜா ஆர் ரவி சி கே.துளசிக்குமார் குணசேகரன் நிர்மலா மற்றும் அரங்கநாதன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் முடிவில் பொருளாளர் எ சரண்யா நன்றி கூறினார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக