அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் வாராந்திர கூட்டம் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 செப்டம்பர், 2025

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் வாராந்திர கூட்டம் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது


திருப்பூர் கொங்கு நகர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சங்க நிறுவன தலைவர் ஜி. கே. விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது 

இறை வணக்க பாடலோடு தொடங்கிய ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளர் வேலுச்சாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார் இந்த கூட்டத்தில் தகுதி வாய்ந்த  தலைமையும் திறன்மிகு 

தொண்டர்களும் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன இந்த நிகழ்வில் தலைமை உரை ஆற்றிய நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் நீங்கள்

 தனித்துவமாக வேண்டுமானால் உழைப்போடு உங்கள் தகுதியை வளர்த்து கொண்டால் மட்டுமே தகுதி வாய்ந்த தலைமைக்கு திறன்மிகு தொண்டர்களாக முடியும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஜி.கே. விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தனது உரையில் எடுத்துரைத்தார்  

மேலும் வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தெக்கலூர் ஊராட்சி ஏரிப்பாளையம் கிளை யின் நிர்வாகிகள் மகளிர் அணி தலைவி மஞ்சுளா லட்சுமணன் துணை தலைவி சுபலட்சுமி அவிநாசி ஒன்றிய அமைப்பாளர் தர்மன் ஆகியோருக்கு சால்வை அறிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த வார நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் 25 வது வார்டு சிறுபூலுபட்டி கிளை தொழிலாளர் பிரிவு தலைவர் RLR இரமேஷ் ஆகியோர் உறுதிமொழி வாசிக்க நன்றி உறையோடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்த வாராந்திர ஆலோசனை கூட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றது.

வரும் வாரம் 14-9-2025 அன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில்  திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளர் வேலுச்சாமி வழி நடத்துகிறார் அன்றைய தினம் உழைப்பே உயர்வு தரும் என்ற தலைப்பில் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஊடகப்பிரிவு சார்பாக கேட்டு கொள்ளப்பட்டது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad