திருப்பூர் வடக்கு மாவட்டம் ஒன்றாவது மண்டலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை மேயர் பார்வையிட்டார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

திருப்பூர் வடக்கு மாவட்டம் ஒன்றாவது மண்டலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை மேயர் பார்வையிட்டார்


 தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள திட்டங்களில் ஒன்றான "உங்களுடன் ஸ்டாலின்"திட்டத்தை திருப்பூர் வடக்கு மாவட்டம், ஒன்றாவது மண்டலம்- -15-21-22-  வார்டுகளுக்கு செங்குந்தர் மாஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்த முகாமினை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் பார்வையிட்டு, இத்திட்டத்தில் பயன்பெற்ற மக்களுக்கு கழக நிர்வாகிகளுடன் சான்றிதழ்களை வழங்கினார் இந்த நிகழ்வில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 22 ஆவது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்  கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர் இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது அரசு தேவைகளை மனுவாக கொடுத்து பதிவு செய்தனர். இதுவரை நடந்த முகாம்களில் இ சேவை மையத்தில் பதிவு செய்யும் இடத்தில்  பொதுமக்கள் தங்களது தேவைகளை பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது தமிழ்நாடு அரசு  இ சேவை மையத்தில் பதிவு செய்ய தனி முகாம் நடத்தினால் பொதுமக்கள் அதில் கலந்து கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் இந்த முகாமில் இ சேவை மையத்தில் பதிவு செய்ய 

 மணிகணக்கில் காத்திருந்த  பொதுமக்கள் கூறினார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad