கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரையிலான நான்கு வழி சாலை பணிகள் 1041 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது
இதுவரை 56% பணிகள் முடிவடைந்து உள்ளன இந்த பணியானது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய்வசந்த் குமரி மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளை ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் TTK கன்ஸ்ட்ரக்ஷன் ஆன்ஸ்ட்ராஜ், நகாய் ரவிச்சந்திரன் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை கூடிய விரைவில் அர்ப்பணிக்க ஆவன செய்ய அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
நீர்ப்பாசன கால்வாய்கள் உள்ள பகுதிகளில் சரியா முறையில் பணிகள் நடைபெறவில்லை, தண்ணீர் வரும் பகுதிகள் அடைக்க படுவதாக மனுக்கள் வந்துள்ளன, விவசாயத்துக்கு எந்த வித இடர்பாடுகள் வராமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அவருடன் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கிறிஸ்டிரமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக